Connect with us

வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு: மூன்று நாட்களுக்கு கொட்டப்போகுது மழை!

mumbai rain 33

News

வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு: மூன்று நாட்களுக்கு கொட்டப்போகுது மழை!

வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு: மூன்று நாட்களுக்கு கொட்டப்போகுது மழை!

வங்கக் கடலின் கிழக்கு பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி தோன்ற இருக்கும் காரணத்தினால் தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு மிக கனமழை இடியுடன் பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது

அக்டோபர் 10ஆம் தேதி அதாவது நாளை கிழக்கு வங்க கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு உள்ளது. இதனை அடுத்து தமிழகத்தில் இன்று முதல் 12ஆம் தேதி வரை பல பகுதிகளில் கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. எனவே அடுத்த 3 நாட்களுக்கு மழை பெய்யும் இடங்கள் குறித்த தகவல்கள் பின்வருவன:

இன்றும் நாளையும் வட மாவட்டங்களில் ஒரு சில பகுதிகள் தென் மாவட்டங்களில் உள்ள ஒரு சில பகுதிகளில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளது:

அக்டோபர் 10-ந் தேதி: நீலகிரி, கோவை, புதுக்கோட்டை, கிருஷ்ணகிரி ஈரோடு, வட மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகள்.

அக்டோபர் 11-ந் தேதி: வேலூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, திருவள்ளூர், காஞ்சிபுரம், டெல்டா மாவட்டங்கள், புதுக்கோட்டை, வடமாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகள்

அக்டோபர் 12-ந் தேதி: நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல் மற்றும் சேலம், மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள், கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் ஆகிய பகுதிகள்

 

 

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in News

To Top