தமிழகம்
கனமழை வெளுத்து வாங்கப்போகுது: சென்னை வானிலை ஆய்வு மையம்!
தமிழகத்தின் மழை நிலவரம் குறித்து அவ்வப்போது சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து வரும் நிலையில் தற்போது தமிழகத்தின் 7 மாவட்டங்களில் கனமழை குறித்து அறிவிப்பை வெளியிட்டுள்ளது
வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தில் கோவை, நீலகிரி, சேலம், தருமபுரி, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், தேனி ஆகிய 7 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது
மேலும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக இன்று மேலும் 3 மாவட்டங்களில் மழை பெய்யும் என்றும் மதுரை, ஈரோடு திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த சில நாட்களாக தமிழகத்தின் பல பகுதிகளில் மிதமான மழை முதல் கனமழை பெய்து வரும் நிலையில் இன்றும் 10 மாவட்டங்களில் மழை என்று அறிவிக்கப்பட்டுள்ளது
