சரித்திரத்தை மாற்றி எழுதப்போகும் சென்னை மேயர் பதவி..!! முதல் முறையாக வட சென்னையை சேர்ந்த பெண் மேயர்?
இன்றைய தினம் திமுக கட்சியிலிருந்து விறுவிறுப்பான தகவல் வெளியாகி கொண்டுவருகிறது. ஏனென்றால் நாளைய தினம் நடைபெற்ற தேர்தல் நடைபெற உள்ளதால் இன்று கூட்டணி கட்சிகளுக்கு பதவி பங்கீட்டை திமுக விரைந்து அறிவித்து வருகிறது.
இந்த நிலையில் சென்னை மேயர் பதவி திமுக கட்சிக்கு தான் என்பது அனைவருக்கும் தெரிந்ததுதான். இதில் முதல் முறையாக வட சென்னையை சேர்ந்த பெண் ஒருவர் மேயராக உள்ளது குறிப்பிடத்தக்கது.
அதன்படி சென்னையில் மொத்தம் 200 வார்டுகள் உள்ளன. இந்த சென்னை மாநகராட்சியில் மேயர் பதவி பெண்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதனால் சென்னை மாநகராட்சியின் மேயராக திமுகவின் பிரியா ராஜன் தேர்ந்தெடுக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இது குறித்த உறுதியான தகவல் இன்னும் சில நிமிடங்களில் வெளியாக உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. இவர் வடசென்னை பகுதியான திருவிக நகரில் உள்ள 74 வது வார்டில் வெற்றி பெற்றவர்தான் பிரியா ராஜன்.
இதற்கு முன் தென்சென்னை பகுதியை சேர்ந்தவர்களே திமுகவின் சார்பில் சென்னை மேயராக தேர்வாகி உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. இவருக்கு 28 வயது என்பதும் இவர் m.com பட்டதாரி என்பதும் குறிப்பிடத்தக்கது.
முன்னாள் எம்எல்ஏ செங்கை சிவத்தின் பேத்தி தான் பிரியா ராஜன். திருவிக நகர் முதல்வர் ஸ்டாலின் தொகுதியான கொளத்தூர் அருகே உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
