வாய்ப்பே தர மாட்டிக்காங்க சென்னை மேயர்!! கவுன்சிலர்கள் வெளிநடப்பு;
இன்றைய தினம் காலையில் மிக முக்கியமான அறிவிப்பு ஒன்று வெளியானது. அதன்படி இன்றைய தினம் 2022 2023 ஆம் நிதியாண்டுக்கான சென்னை மாநகராட்சி பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டது.
சென்னை மேயராக பிரியா ராஜன் பதவியேற்றபின் கூடுகின்ற முதல் பட்ஜெட் கூட்டத்தொடர் என்பதும் குறிப்பிடத்தக்கது. இவரைப் பற்றி பல விமர்சனங்கள் வந்தாலும் அதனை செயல் திட்டங்கள் மூலமாக முறியடுத்து மக்களிடையே நல்லதொரு வரவேற்பு பெற்று வருகிறார் சென்னை மேயர் பிரியா ராஜன்.
இந்த நிலையில் இன்று நடைபெற்ற பட்ஜெட் கூட்டத்தொடரில் ஏராளமான நலத் திட்டங்கள் பற்றி அறிவிக்கப்பட்டது. அதிலும் குறிப்பாக பள்ளி மாணவிகளுக்கு இலவச நாப்கின்கள் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
இந்த நிலையில் சென்னை மாநகராட்சிக் கூட்டத்தில் இருந்து திடீரென்று அதிமுக கவுன்சிலர்கள் வெளிநடப்பு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி இன்று நடைபெற்ற கூட்டத்தில் அதிமுக கவுன்சிலர்கள் வெளிநடப்பு செய்துள்ளனர். சொத்து வரி உயர்வு குறித்து பேசிய மேயர் அனுமதி தராததால் அதிருப்தியை தெரிவித்து வெளிநடப்பு செய்தனர்.
