தண்ணீரில் தத்தளிக்கும் சென்னை! மழைநீரில் மூழ்கிய சாலைகள்!! போக்குவரத்தில் தொடர் மாற்றம்!!!

தலைநகர் சென்னையில் பெய்த கன மழையால் மாநகரம் முழுவதும் நீருக்குள் மூழ்கி உள்ளது. இதனால் அங்கு சாலை போக்குவரத்து மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் மழை நீர் தேக்கம் காரணமாக சென்னையில் சாலை போக்குவரத்து மாற்றம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

சென்னை
 

அதன்படி கேகே நகர் ராஜமன்னார் சாலையில் தண்ணீர் தேங்கி உள்ளதால் இரண்டாவது அவன் யூவை நோக்கி போக்குவரத்து திருப்பி விடப்படுகிறது. வளசரவாக்கம் மெகா மார்ட் சாலையில் நீர் தேங்கியுள்ளதால் ஆற்காடு ரோடு செல்ல கேசவர்தினி சாலை நோக்கி வாகனங்கள் திருப்பி விடப்பட்டுள்ளது.

வாணி மஹால்-பென்ஸ் பார்க் வரை தண்ணீர் தேங்கி உள்ளதால் ஹபிபுல்லா சாலை,ராகவைய்யா சாலையில் செல்ல வாகனங்கள் திருப்பிவிடப்பட்டுள்ளன. வடிகால் நீர் அமைக்கும் பணியால் உதயம் திரையரங்கம் நோக்கி செல்லும் வாகனங்கள் அனைத்தும் அதற்கு எதிர் திசையில் அனுமதிக்கப்படுகின்றன.

உதயம் சந்திப்பில் காசி முனை தொடங்கி அண்ணா பிரதான சாலை செல்லும் கனரக வாகனங்கள் அனைத்தும் அசோக்பில்லர் நோக்கி திருப்பி விடப்பட்டுள்ளன. மேடவாக்கம் முதல் சோளிங்கநல்லூர் வரை போக்குவரத்து தடை செய்யப்பட்டு வாகனங்கள் அனைத்தும் காமாட்சி மருத்துவமனை வழியாக திருப்பி விடப்பட்டுள்ளது. அசோக் நகர் போஸ்டல் காலனி சாலையில் மழை நீர் தேங்கியுள்ளதால் அங்கு வாகனங்கள் மெதுவாக கடந்து செல்கின்றன.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment