அடுத்த திருவிழாவுக்கு தயாராகும் சென்னை; கோலாகல ஏற்பாடுடன் காத்திருக்கும் கடற்கரை!!

கடந்த சில மாதங்களாக வரிசையாக நம் தலைநகர் சென்னையில் தொடர்ந்து சிறப்பு நிகழ்ச்சிகள், விழாக்கள் நடைபெற்று கொண்டு வருகிறது. அதிலும் குறிப்பாக கடந்த வாரம் வரை சென்னையில் செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெற்றது.

இது இந்தியாவிலேயே முதல் முறையாக நடைபெற்றது என்பதும் குறிப்பிடத்தக்கது. இதற்கான விருதுகளை தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் வெற்றியாளர்களுக்கு வழங்கினார். இந்த நிலையில் அடுத்த ஒரு நிகழ்ச்சிக்காக நம் சென்னை தற்போது தயாராகிக் கொண்டுள்ளதாக தகவல் கிடைத்தது.

அதன்படி ஆகஸ்ட் 22ஆம் தேதி சென்னை தினத்தை கலை நிகழ்ச்சிகளுடன் கோலாகலமாக கொண்டாட சென்னை மாநகராட்சி சார்பில் இருந்து ஏற்பாடுகள் தற்போது முதல் தீவிர படுத்தப்பட்டுள்ளது.

பெசன்ட் நகர் கடற்கரையில் ஆகஸ்ட் 20ஆம் தேதி முதல் ஞாயிறு நள்ளிரவு வரை கலை நிகழ்ச்சிகள் உணவு திருவிழா, கண்காட்சிகள் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

எலியட்ஸ் கடற்கரை சாலையில் வண்ணமயமான மின்விளக்குகள் அமைக்கவும் ஏற்பாடு செய்யப்படுகிறது என்று சென்னை மாநகராட்சி கூறியுள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment