Connect with us

சென்னை ஐஐடி மாணவர் விரக்தியில் தூக்கிட்டு தற்கொலை? – சிபிசிஐடிக்கு மாற்றம்!!

தற்கொலை

தமிழகம்

சென்னை ஐஐடி மாணவர் விரக்தியில் தூக்கிட்டு தற்கொலை? – சிபிசிஐடிக்கு மாற்றம்!!

சென்னையில் ஐஐடி விடுதியில் ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த மாணவன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

கடந்த சில நாட்களாகவே மானவர்கள் தூக்கிட்டு தற்கொலை செய்துகொள்ளும் சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இவற்றை தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டப்போதுலும் இன்னும் குறைந்தபாடில்லை.

அந்த வகையில் சென்னை ஐஐடி-யில் ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த ஒருவர் கோட்டூர்புரம் பகுதியில் இருக்கும் விடுதியில் தங்கி பி.டெ.க் ஏரோஸ்பேஸ் இஞ்ஜினியரிங் 4-ஆம் ஆண்டு படித்து வந்துள்ளார்.

இந்நிலையில் நடந்து முடிந்த செமஸ்டர் தேர்வில் மாணவர் 4 பேப்பர்களில் தோல்வியடைந்தாக தெரிகிறது. இதனால் கடந்த இரண்டு நாட்களாக மன உளைச்சலில் இருந்து வந்த மாணவன் நேற்று இரவு விடுதியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

சக மாணவர்கள் கொடுத்த தகவலின்பேரில் மாணவனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். இதற்கிடையில் சென்னை ஐஐடியில் மாணவன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட வழக்கில் சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in தமிழகம்

To Top