13 மாதங்களில் மட்டும் 57 நாய்களை கொன்றது சென்னை ஐஐடி!: தமிழக கால்நடைத்துறை;

சில வாரங்களுக்கு முன்பு சென்னை ஐஐடியில் தெருநாய்கள் செத்து கிடந்ததாக தகவல் வெளியானது.ஏனென்றால் தெருநாய்கள் தொந்தரவு காரணமாக அந்த நாய்களை பிடித்து கூண்டில் அடைத்து, சித்திரவதை செய்ததாகவும் கூறப்படுகிறது.

நாய்கள்

அதோடு அந்த நாய்களுக்கு உணவு அளிக்காமல் போனதால் பசியில் அந்த நாய்கள் இறந்ததாகவும் கூறப்படுகிறது. இது குறித்து தமிழ்நாடு கால்நடை துறையினர் பல அதிர்ச்சிகரமான தகவல்களை கூறியுள்ளனர்.

அதன்படி சென்னை ஐஐடி வளாகத்தில் கடந்த 13 மாதங்களில் மட்டும் 57 நாய்கள் இறந்துள்ளதாக தமிழக கால்நடைத்துறை ஐகோர்ட்டில் தகவல் அளித்துள்ளது. சென்னை ஐஐடி வளாகத்தில் நாய்களை முறையாக பராமரிப்பது கண்காணிக்க கோரிய வழக்கில் இத்தகைய தகவல் வெளியாகியுள்ளது.

கால்நடைகளுக்கான மக்கள் அமைப்பு தொடர்ந்த வழக்கு ஐகோர்ட்டில் இன்று விசாரணைக்கு வந்தது.தெருநாய்களை முறையாக பராமரிக்க வேண்டியது உள்ளாட்சி அமைப்புகளின் கடமை என்று வழக்கை விசாரித்த நீதிபதிகள் தங்கள் கருத்தை கூறினார். அடிப்படை உரிமை பற்றி பேசும் நேரத்தில் அடிப்படை கடமையையும் நாம் கருத்தில் கொண்டு செயல்படுத்த வேண்டும் என்று நீதிபதிகள் கூறினர்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment