Connect with us

#Breaking மாமல்லபுரமா? குப்பைகிடங்கா?… அதிகாரிகளை வெளுத்து வாங்கிய ஐகோர்ட்!

high court

செய்திகள்

#Breaking மாமல்லபுரமா? குப்பைகிடங்கா?… அதிகாரிகளை வெளுத்து வாங்கிய ஐகோர்ட்!

#Breaking மாமல்லபுரமா? குப்பைகிடங்கா?… அதிகாரிகளை வெளுத்து வாங்கிய ஐகோர்ட்!

மாமல்லபுரத்துக்கு நுழைவு கட்டணம் வசூலிப்பது குப்பை கிடங்குக்கு நுழையவா? என சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

தமிழகத்தில் பிரசித்திபெற்ற சுற்றுலா தளங்களில் ஒன்றான மாமல்லபுரத்தில் குப்பைக் கிடங்கை அகற்றக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த போது, விதிகளை பின்பற்றாத அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியது. சுற்றுலா தலமான மாமல்லபுரத்தை முறையாக பராமரிக்காதது துரதிருஷ்டவசமானது எனவும் அதிருப்தி தெரிவித்தது.

மாமல்லபுரத்துக்கு நுழைவு கட்டணம் வசூலிப்பது குப்பை கிடங்குக்கு நுழையவா? என கேள்வி எழுப்பிய நீதிபதிகள், வழக்கு விசாரணையை இருவாரங்களுக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in செய்திகள்

To Top