#BREAKING சொத்து வரி உயர்வு செல்லும் – உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

சென்னை, கோவை மாநகராட்சிகளில் சொத்து வரியை உயர்த்தி தமிழக அரசு பிறப்பித்த அரசாணையும், மாநகராட்சிகளின் தீர்மானங்களும் செல்லும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்லது.

சொத்து வரி உயர்வை எதிர்த்த நூறுக்கும் மேற்பட்ட வழக்குகளை நிராகரித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. சொத்து வரியை உயர்த்தி அனுப்பிய நோட்டீசை எதிர்த்து வழக்கு தொடர்ந்த மனுதாரர்களுக்கு 2023 ஏப்ரல் முதல் சொத்து வரி உயர்வை அமல்படுத்த சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

சொத்து வரி தொடர்பான விளக்கங்களை மக்கள் பெற ஏதுவாக மாநகராட்சிகள், தங்கள் இணையதளங்களை மேம்படுத்தவும் ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.