தமிழகமே கொந்தளித்த விவகாரம்… எஸ்கேப் ஆன சிம்பு!
பெண்களை அவதூறாக சித்தரித்து நடிகர் சிம்பு பாடிய பீப் பாடல் தொடர்பான வழக்கில் இருந்து அவர் விடுவிக்கப்பட்டுள்ளார்.
கடந்த 2015-ம் ஆண்டில் நடிகர் சிம்பு பெண்களை பற்றி பாடிய பாடல் பீப் சாங் மிகப்பெரிய சர்ச்சையை உருவாக்கியது. மகளிர் அமைப்புகள், அரசியல் கட்சிகள் என பலவும் சிம்பு வீட்டின் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டன.
மேலும் பாடலை பாடிய சிம்பு, மற்றும் அதற்கு இசையமைத்த அனிருத் மீது புகார் அளிக்கப்பட்டதை அடுத்து கோவை, சென்னை என பல இடங்களில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
அந்த வழக்கின் விசாரணையில் நடிகர் சிம்புவுக்கு எதிரான புகாருக்கு ஆதாரம் இல்லை என கோவை மாஜிஸ்திரேட்டின் விசாரணை அறிக்கை அடிப்படையில் ரத்து செய்யப்படுவதாக நீதிபதி அறிவித்துள்ளார். சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் பதிவு செய்த வழக்கு தொடர்பாக சென்னை காவல்துறை ஒரு வாரத்திற்குள் பதிலளிக்கவும் உத்தரவிட்டுள்ளார்.
பீப் பாடல் விவகாரம் தொடர்பாக நடிகர் சிம்புவுக்கு எதிராக கோவை காவல்துறை பதிவு செய்த வழக்கை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
