ஓபிஎஸ் எடுத்த அதிரடி முடிவு : ஒப்புக் கொண்ட நீதிபதி!!

அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரம் விஸ்வரூபம் எடுத்திருக்கும் நிலையில் இபிஎஸ் மீது அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டு நேற்று விசாரணைக்கு வந்தது.

அப்போது பேசிய நீதிபதிகள் 23 தீர்மானங்கள் தவிர மற்ற தீர்மானங்கள் கொண்டுவரக்கூடாது என்று உத்தரவு ஜூன் 23-ம் தேதிக்கு மட்டுமே பொருந்தும் என்றும் வருகின்ற 11ம் தேதி நடைபெறும் பொதுக்குழு கூட்டத்திற்கு இந்த உத்தரவு செல்லாது என கூறினர்.

அதோடு அதிமுக-வின் பொதுக்குழு நடத்துவதற்கு தடைவிதிக்க கோரி தனி நீதிபதியைத்தான் அணுக வேண்டும் என்று நீதிபதிகள் கூறி வழக்கு விசாரணையை ஜூலை 7-ம் தேதிக்கு தள்ளி வைத்தனர். இந்த சூழலில் தற்போது கிருஷ்ணன் ராமசாமி முன்பு உயர் நீதிமன்றத்தில் முறையீடு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

அதில் வருகின்ற 11-ஆம் தேதி நடைப்பெற இருக்கும் பொதுக்குழு கூட்டத்திற்கு தடைவிதிக்ககோரி மனுதாக்கல் செய்துள்ளதாகவும் இந்த மனுவை அவசர வழக்காக எடுத்து விசாரிக்க வேண்டும் என்று முறையீடு செய்யப்பட்டுள்ளது.

இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதி இந்த வழக்கை நாளை விசாரிக்க ஒப்புக்கொண்டுள்ளார். அதே சமயம் நாளைய தினத்தில் உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கும் விசாரணைக்கு வருவதாக கூறப்பட்டுள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment