Connect with us

சென்னை உயர்நீதிமன்றம் நாளை 9 நீதிபதிகள் பதவியேற்பு!!

ஹை கோர்ட்

Tamil Nadu

சென்னை உயர்நீதிமன்றம் நாளை 9 நீதிபதிகள் பதவியேற்பு!!

சென்னை உயர்நீதிமன்றத்தில் நிரந்தர  9 பேர் நாளை நீதிபதிகளாக பதவி ஏற்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

சென்னை உயர் நீதிமன்றத்தில் கூடுதல் நீதிபதியாக இருக்கும் சந்திரசேகர், சிவஞானம், இளங்கோவன், ஆனந்தி, கண்ணம்மாள், சதீஸ்குமார், முரளிசங்கர். ஆர்.என் மஞ்சுளா, தமிழ்ச்செல்வி ஆகியோரை நிரந்தர நீதிபதிகளாக நியமிக்க கடந்த மாதம் பரீந்துறை செய்யப்பட்டது.

இதனையடுத்து குடியரசுத் தலைவர் அண்மையில் இதற்கான உத்தரவு ஒன்றை பிறப்பித்தார். இவர்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் கூடுதல் நீதிபதியாக தேர்வுசெய்யப்பட்டனர்.

இந்நிலையில் நாளை சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி முனீஸ்வர்நாத் பண்டாரி இவர்களுக்கு பதவியேற்பு உறுதிமொழியை செய்து வைக்கிறார்.

கடந்த 2020 ஆண்டு இவர்கள் கூடுதல் நீதிபதிகளாக பதவியேற்றனர். மேலும், நிரந்தர நீதிபதிகளாக பதவியேற்கும் நீதிபதி முரளிசங்கர் மற்றும் தமிழ்ச்செல்வி ஆகியோர்கள் கணவன் மனைவி என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in Tamil Nadu

To Top