Connect with us

இழுத்து மூடிடுவோம்! டாஸ்மார்க் நிர்வாகத்துக்கு உயர்நீதிமன்றம் எச்சரிக்கை..!

150349 court chennai

News

இழுத்து மூடிடுவோம்! டாஸ்மார்க் நிர்வாகத்துக்கு உயர்நீதிமன்றம் எச்சரிக்கை..!

இழுத்து மூடிடுவோம்! டாஸ்மார்க் நிர்வாகத்துக்கு உயர்நீதிமன்றம் எச்சரிக்கை..!

மலை பகுதிகளில் உள்ள டாஸ்மாக் மதுபானக் கடைகள், கண்ணாடி பாட்டில்களை திரும்பப் பெறுவது தொடர்பான திட்டத்தை வகுக்காவிட்டால் மதுபான கடைகளை மூட உத்தரவிட நேரிடும் என சென்னை உயர் நீதிமன்றம் எச்சரித்துள்ளது.

வன பகுதியில் பிளாஸ்டிக் பொருள்கள், மதுபாட்டில்கள் குவிந்து கிடப்பது தொடர்பாக இணையத்தில் வெளியான காணொலிக் காட்சி அடிப்படையில் சென்னை உயர் நீதிமன்றம் தானே வழக்கை விசாரணைக்கு எடுத்தது. நீதிபதிகள் பாரதிதாசன் மற்றும் சதீஷ்குமார்

அமர்வு முன்பு இன்று நடைபெற்ற விசாரணையின் போது, கண்ணாடியை விலங்குகள் மிதிக்கும் போது காயமடைந்து, அடுத்த மூன்று மாதங்களில் அவை இறந்து விடுகின்றன என வருத்தம் தெரிவித்தனர்.

மலைவாசஸ்தலங்களில் உள்ள டாஸ்மாக் மதுபானக் கடைகள், கண்ணாடி பாட்டில்களை திரும்பப் பெறுவது தொடர்பான திட்டத்தை வகுக்க வேண்டும் என்று அறிவுறுத்திய சென்னை உயர் நீதிமன்றம், இல்லாவிட்டால் டாஸ்மாக் மதுபான கடைகளை மூட உத்தரவிட நேரிடும் என டாஸ்மாக் நிர்வாகத்துக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in News

To Top