Connect with us

ஆகஸ்ட் ஒன்றாம் தேதி கனமழையை அன்போடு வரவேற்குமா சென்னை?

மழை

தமிழகம்

ஆகஸ்ட் ஒன்றாம் தேதி கனமழையை அன்போடு வரவேற்குமா சென்னை?

வந்தாரை வாழவைக்கும் சென்னை அனைவரையும் வரவேற்று கொண்டு வருகிறது. அதிலும் குறிப்பாக சென்னை செஸ் ஒலிம்பியாட் போட்டியில் பங்கேற்க வந்த அனைத்து வெளிநாட்டு வீரர்களையும் ஆரவார வரவேற்புடன் சென்னை வரவேற்றது.

இந்த நிலையில் ஆகஸ்ட் மாதம் முதல் தேதியிலேயே மற்றும் ஒரு வரவேற்பு நிகழ உள்ளதாக தெரிகிறது. அதன்படி ஆகஸ்ட் 1 மற்றும் இரண்டாம் தேதிகளில் சென்னை பெருநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் கன மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

மேலும் திருவள்ளூர், செங்கல்பட்டு உள்ளிட்ட சென்னைக்கு அருகாமை உள்ள மாவட்டங்களிலும் கன மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்றும் வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

ஆகஸ்ட் ஒன்றாம் தேதி திருவள்ளூர் ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், கடலூர், அரியலூர், தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்களில் கன முதல் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளது என்றும் வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

மேலும் காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களிலும் கனமழை வாய்ப்பு உள்ளது என்றும் வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

திருச்சி, புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், நாகப்பட்டினம், திருவாரூர் மயிலாடுதுறை மாவட்டங்களிலும் கனமழை வாய்ப்புள்ளது என்றும் வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

மேலும் நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் ஓரிரிடங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது என்று வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. இதனால் தமிழகத்தில் ஆகஸ்ட் ஒன்றாம் தேதி பெரும்பாலான மாவட்டங்களில் கன மழை செய்யலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in தமிழகம்

To Top