சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை புதிய உச்சமாக சவரனுக்கு ரூ.520 உயர்ந்துள்ளது.
நேற்று சற்றே சரிந்து மகிழ்ச்சி அளித்த தங்கம் விலை இன்று ஒரே நாளில் ஒரேயடியாய் உயர்ந்து இல்லத்தரசிகளை பேரதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
இன்றைய நிலவரப்படி சென்னையில் 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமிற்கு 65 ரூபாய் அதிகரித்து 5,600 ரூபாய்க்கும், சவரனுக்கு 520 ரூபாய் அதிகரித்து 44,800 ரூபாய்க்கும் விற்பனையாகி வருகிறது.
24 காரட் சுத்த தங்கத்தைப் பொறுத்தவரை கிராமிற்கு 65 ரூபாய் அதிகரித்து 6,076 ரூபாய்க்கும், சவரனுக்கு 520 ரூபாய் அதிகரித்து 48,608 ரூபாய்க்கும் விற்பனையாகி வருகிறது.
தங்கத்தை போலவே வெள்ளியின் விலையும் தாறுமாறாக அதிகரித்துள்ளது. வெள்ளியின் விலை கிராமிற்கு 70 காசுகள் அதிகரித்து 77 ரூபாய் 80 காசுகளுக்கும், கிலோவிற்கு 700 ரூபாய் அதிகரித்து 77 ஆயிரத்து 800 ரூபாய்க்கும் விற்பனையாகி வருகிறது.