தங்கம் விலை அதிரடி குறைவு; நகைக்கடையில் குவியும் இல்லத்தரசிகள்!!

உலக அளவில் நீடிக்கும் பணவீக்கம் மற்றும் கொரோனா தொற்று காரணம் தங்கம் விலையானது தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே போகிறது. இதன் காரணமாக மக்கள் தங்கத்தை முதலீடு செய்ய அதிக ஆர்வம் காட்டுகின்றனர்.

இந்நிலையில் 22 கிராம் கேரட் தங்கம் விலையானது சற்று குறைந்து காணப்படுவதால் பொதுமக்கள் நிம்மதி அடைந்துள்ளனர். அதன் படி, ஒரு கிராம் ரூ.23 ஆகவும் சவரனுக்கு ரூ.184 குறைந்து ஒரு பவும் ரூ.41, 896 ஆக விற்பனை செய்யப்படுகிறது.

கேரளாவில் பிரியாணி சாப்பிட்ட மாணவியின் மரணத்தில் திடீர் திருப்பம்!

அதே போல் தூயத்தங்கத்தின் விலையில் கிராமிற்கு ரூ.25 குறைந்து ஒரு கிராம் ரூ.5,713 ஆக விற்பனை செய்யப்படுகிறது. பவுனுக்கு ரூ.200 குறைந்து ஒரு சவரன் 45,704 ஆக விற்பனை செய்யப்படுகிறது.

சென்னையில் இன்று வெள்ளியின் கிராம் ஒன்றுக்கு 1.20 காசுகள் குறைந்து ஒரு கிராம் ரூபாய் 73.70 எனவும், ஒரு கிலோ விலை ரூபாய் 73 ஆயிரத்து 370 ஆக விற்பனையாகி வருகிறது.

பல பெண்களுடன் தொடர்பு! தட்டிக்கேட்ட மனைவி… திருச்சியில் பரபரப்பு!

மேலும், வரும் காலங்களில் தங்கத்தின் விலை அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாக நகை வியாபாரிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.