பவர்பேங்கில் சார்ஜ் போட்டுக்கொண்டே செல்போன் பேசிய இளம்பெண்: சென்னையில் நடந்த விபரீதம்

சென்னை சேர்ந்த இளம் பெண் ஒருவர் பவர் பேங்கில் சார்ஜ் போட்டுக் கொண்டே பேசிக் கொண்டிருந்தபோது திடீரென மின்சாரம் ஷாக் அடித்து பலியான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சென்னை தாம்பரம் அருகே ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த இளம் பெண் ஒருவர் பவர் பேங்கில் சார்ஜ் போட்டுக் கொண்டே தனது நண்பர்களிடம் பேசிக் கொண்டிருந்தார். அப்போது அவர் மொட்டை மாடியில் காயப் போட்டிருந்த துணியை எடுத்துக் கொண்டிருந்தபோது திடீரென உயர் அழுத்த மின்சார கம்பி துணி காயப்போடும் கொடியில் பட்டதை அடுத்து அவர் ஷாக் அடித்து தூக்கி எறியப்பட்டார்

இதனை அடுத்து படுகாயம் அடைந்த அவர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்க பட்டிருந்த நிலையில் சிகிச்சையின் பலன் இன்றி பரிதாபமாக உயிரிழந்தார்

இந்த சம்பவம் பெறும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. செல்போனில் சார்ஜ் போட்டுக் கொண்டிருக்கும் போது பேசுவது பேராபத்து என பலமுறை எச்சரிக்கை விடப்படும் இன்னும் சிலர் உயிரிழந்து வருவது பரிதாபத்துக்குரியதாக உள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.