Connect with us

எந்த நோயும் இல்லாமல் கொரோனாவால் ஒரே நாளில் உயிரிழந்த இளம்பெண்: சென்னையில் பரபரப்பு

News

எந்த நோயும் இல்லாமல் கொரோனாவால் ஒரே நாளில் உயிரிழந்த இளம்பெண்: சென்னையில் பரபரப்பு

cdfaf1bf3373555930a58a7fb3c0c55b

கொரோனா தவிர வேறு எந்த நோயும் இல்லாத சென்னையை சேர்ந்த இளம்பெண் ஒருவர் பலியாகி உள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அதிலும் அந்த இளம் பெண் மருத்துவமனையில் சேர்ந்த ஒரே நாளில் பலியாகி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

சென்னையில் நாளுக்கு நாள் கொரோனாவால் பலியாகி வருபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகிறது. இன்று மட்டும் சென்னையில் 26 பேர் கொரோனாவால் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் சென்னையை சேர்ந்த 21 வயது இளம்பெண்ணுக்கு சளி மற்றும் காய்ச்சல் மட்டுமே இருந்துள்ளது. அவருக்கு வேறு எந்த நோயும் இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. இதனை அடுத்து அவருக்கு கொரோனா பரிசோதனை செய்ததில் பாசிட்டிவ் என உறுதியானது

இதனால் அவர் ஜூலை 6 ஆம் தேதி காலை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் அவருக்கு திடீரென மூச்சு பிரச்சனை ஏற்பட்டு ஜூலை 7ஆம் தேதி காலை 7 மணிக்கு உயிரிழந்தார். கொரோனா அறிகுறி தவிர சர்க்கரை நோய் இதய நோய் உள்ளிட்ட வேறு எந்த நோய்களும் இல்லாத இளம் பெண் ஒருவர் சென்னையில் கொரோனாவால் மட்டும் பலியாகியுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது

இதற்கு முன்னால் கொரோனாவால் உயிரிழந்தவர்களுக்கு சர்க்கரை நோய் உள்பட பல்வேறு நோய் இருந்த நிலையில் தற்போது கொரோனாவால் மட்டுமே உயிரிழந்துள்ளது அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading
You may also like...
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

More in News

To Top