2 மணிநேரத்தில் சென்னை to பெங்களூரு செல்லலாம்: வருகிறது அதிவிரைவு சாலை திட்டம்!!
சென்னை – பெங்களூர் நகரங்களிக்கிடையே தற்போது சாலைவழியாக பயணிக்க 6 முதல் 7 மணி நேரம் ஆகிறது. இவ்வழித்தடத்தில் நாள்தோறும் சுமார் 10000 ஆயிரம் வாகனங்கள் பயணிப்பதோடு சரக்கு வாகனங்களும் பயணிப்பதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
இதனை தடுக்க சென்னை – பெங்களூர் அதிவிரைவு சாலை திட்டத்தை நெடுஞ்சாலை துறை ஆணையகம் 12500 கோடி ரூபாயில் செயல்படுத்துகிறது.
அதன்படி கர்நாடக மாநிலம் கொசக்கோட்டையில் 4 வழி அதிவிரைவு சாலை தொடங்கி ஆந்திர மாநிலம் சித்துர் வழியாக தமிழ்நாட்டில் ஸ்ரீபெரும்புதூர் அருகே இருக்காட்டு கோட்டையூர் அருகே முடிவடைய உள்ளது.
பயணம் நேரத்தை வெகுவாக குறைக்கும் வகையில் சுமார் 240 கி.மீட்டர் தூரத்துற்கு அதிவிரைவு சாலை அமைக்கப்படுகிறது. அதற்காக தமிழ்நாட்டில் காஞ்சிபுரம், திருவள்ளூர், வேலூர் மற்றும் ராணிப்பேட்டையில் நிலம் கையகப்படுத்தும் பணிகள் முடிவடைந்து உள்ளன.
இந்த திட்டம் நடைமுறைக்கு வந்தால் 2 மணிநேரத்தில் சென்னையில் இருந்து பெங்களூருவை அடைய முடியும் என்றும் தமிழக பகுதிகளில் இந்த திட்டம் தொடங்கி 30 மாதங்களில் முடிக்க தேசிய நெடுஞ்சாலை திட்டமிட்டுள்ளது.
