சென்னை விமானத்தில் திடீர் இயந்திர கோளாறு.. 146 பயணிகள் கதி என்ன?

சென்னையில் இருந்து கிளம்பிய விமானம் ஒன்று திடீரென இயந்திர கோளாறு காரணமாக தரையிறக்கப்பட்டதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளன.

இன்று காலை சென்னையிலிருந்து தோகாவுக்கு புறப்பட்ட கத்தார் ஏர்வேஸ் விமானத்தில் 139 பயணிகள் பயணம் செய்தனர். மேலும் இந்த விமானத்தில் 7 விமான நிறுவன ஊழியர்களும் இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

flightஇந்த நிலையில் சென்னையில் இருந்து தோகா சென்று கொண்டிருந்த கத்தார் ஏர்வேஸ் விமானத்தில் திடீரென இயந்திர கோளாறு ஏற்பட்டது. இதனை சரியான நேரத்தில் கண்டுபிடித்த விமானி உடனடியாக விமானத்தை தரையிறக்க முடிவு செய்தார். அவர் விமானத்தை கச்சிதமாக தரையிறக்கியதை அடுத்து அந்த விமானத்தில் பயணம் செய்த 139 பயணிகள் மற்றும் 7 விமான ஊழியர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.

இதனையடுத்து அந்த விமானத்தில் ஏற்பட்ட இயந்திரக் கோளாறு குறித்து தற்போது வல்லுநர்கள் ஆய்வு செய்து வருகின்றனர். மேலும் நடுவானில் திடீரென இயந்திர கோளாறு ஏற்பட்டது ஏன் என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் சென்னையில் இருந்து தோகா செல்லும் 139 பயணிகளும் மாற்று விமானத்தில் அனுப்பி வைக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளன.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.