கனமழை எதிரொலி: நாளை மின்சார ரயில் சேவையில் மாற்றம்

சென்னை மற்றும் தமிழகம் முழுவதும் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது என்பதும் இதன் காரணமாக போக்குவரத்து பெருமளவில் பாதிக்கப்பட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

குறிப்பாக சென்னையில் இருந்து கிளம்பும் மின்சார ரயில்கள் தண்டவாளத்தில் தண்ணீர் தேங்கி இருப்பதால் போக்குவரத்தில் சிரமம் ஏற்பட்டுள்ளதாகவும் ஒரு சில ரயில்கள் ரத்து செய்யப்பட்டு இருப்பதாகவும் தெரிகிறது

இந்த நிலையில் சற்று முன்னர் தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி நவம்பர் 11ஆம் தேதி கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டதால் சென்னையில் மின்சார ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டு உள்ளதாக அறிவித்துள்ளது

நாளை அதாவது நவம்பர் 11ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை அட்டவணையின்படி சென்னையில் உள்ள மின்சார ரயில்கள் இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை கணக்கில் கொண்டு பயணிகள் மின்சார ரயிலை பயன்படுத்திக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது

 

 

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment