சென்னையில் புறநகர் ரயில்கள் இயக்குவதில் திடீர் சிக்கல்!

சென்னையில் பெய்த கனமழை காரணமாக கடந்த சில நாட்களாக புறநகர் ரயில்கள் குறைவாகவே இயக்கப்பட்டன என்பதும் ஒரு சில ரயில்கள் ரத்து செய்யப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் தற்போது வந்துள்ள தகவலின்படி சென்னையில் மூடு பணி காரணமாக புறநகர் ரயில்களில் இயக்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாகவும் இதன் காரணமாக ரயில்கள் தாமதமாக வருவதாகவும் தகவல்கள் வெளியாகிஉள்ளது

மின்சார ரயில்களை மெதுவாக இயக்க அறிவுறுத்தப்பட்டு விற்பதாகவும் மூடுபனி காரணமாக திருத்தணி, திருவள்ளூர் மார்க்கமாக சென்னை சென்ட்ரல் வரை இயக்கப்படும் புறநகர் ரயில் மிகவும் மெதுவாக வருவதாகவும் இதனால் புறநகர் ரயில்கள் தாமதமாக வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன

பயண நேரம் கிட்டதட்ட இரண்டு மடங்கு அதிகமாக இருப்பதால் பயணிகள் பெரும் பாதிப்பு அடைந்து இருப்பதாகவும் சரியான நேரத்திற்கு அலுவலகம் மற்றும் பள்ளி கல்லூரிக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் பயணிகள் தரப்பில் இருந்து தெரிவித்துள்ளனர்.

 

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment