சென்னையில் சோகம்! மின்சார ரயில் மோதி இளைஞர் பலி.!!

சென்னை கோடம்பாக்கம் ரயில் நிலையம் அருகே தாம்பரத்திலிருந்து கடற்கரையை நோக்கி சென்றுகொண்டிருந்த மின்சார ரயில் மோதி இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

சென்னை கோடம்பாக்கம் ரயில் நிலையம் அருகே உள்ள ரங்கராஜன் ரயில்வே மேம்பாலத்தின் கீழ் 30 வயது மதிப்பு தக்க அடையாளம் தெரியாத இளைஞர் மீது மின்சார ரயில் மோதியது. இதில் தலை சிதறி வாலிபர் உயிரிழந்துள்ளார்.

பொங்கல் பரிசு தொகுப்பு.. தமிழக முதல்வர் ஆலோசனை..!!

உடலை மீட்ட ஓமந்தூர் காவல்துறையினர் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். அதேபோல் நேற்று இரவு எண்ணூர் அத்திப்பட்டியில் தண்டவாளத்தை கடக்க முயன்ற வடமாநில வாலிபர் ஒருவர் விரைவு ரயில் மோதி பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

இந்த விபத்தை பார்க்க வந்த 50 வயது மதிப்பு தக்க இரண்டு பேர் அதே தண்டவாளத்தில் மோதி உயிரிழந்துள்ளனர். இவர்கள் மது போதையில் இருந்ததாக கூறப்படுகிறது. மரணம் அடைந்தது யார்? என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணையில் ஈடுப்பட்டு வருகின்றனர்.

பரந்தூர் விமான நிலையம்: பொதுமக்களின் பேரணி நிறுத்தம்..!!!

மேலும், கடந்த 15 மணி நேரத்தில் மட்டுமே ரயில் விபத்தில் சிக்கி 4 பேர் பலியாகி இருப்பதாகவும், ஏற்கனவே தண்டவாளங்களை கடக்க படிக்கட்டுகளை பயன்படுத்த வேண்டும் என போலீசார் எச்சரித்தனர். இருப்பினும் பொதுமக்கள் இவற்றை கடைப்பிடிக்காமல் இருப்பதால் விபத்துக்கள் ஏற்படுவதாக தெரிவித்துள்ளனர்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.