Connect with us

சென்னை எழும்பூர்-காரைக்குடி எக்ஸ்பிரஸ்: ரயில்வே துறை புதிய அறிவிப்பு

Tamil Nadu

சென்னை எழும்பூர்-காரைக்குடி எக்ஸ்பிரஸ்: ரயில்வே துறை புதிய அறிவிப்பு

7ba035b34a9d10404330980dec242546

சென்னை எழும்பூர் மற்றும் காரைக்குடி இடையிலான எக்ஸ்பிரஸ் ரயில் வழக்கம் போல் இயங்கும் என தென்னக ரயில்வே தெரிவித்துள்ளது இதுகுறித்து தென்னக ரயில்வே வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது: 

பராமரிப்பு பணி காரணமாக செப்டம்பர் 22-ந்தேதி மற்றும் 29-ந்தேதிகளில் சென்னை எழும்பூர்- காரைக்குடி (வண்டி எண்: 02635), காரைக்குடி-எழும்பூர் (02606) எக்ஸ்பிரஸ் ரெயில்கள் எழும்பூர்-செங்கல்பட்டு இடையே பகுதியாக ரத்து செய்யப்படும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்தது.

இந்த நிலையில், பராமரிப்பு பணி அட்டவணையில் மாற்றம் செய்யப்பட்டு உள்ளதால், மேற்கண்ட நாட்களில் பகுதியாக ரத்து செய்யப்படும் என அறிவிக்கப்பட்ட எழும்பூர்-காரைக்குடி (02635), காரைக்குடி-எழும்பூர் (02606) எக்ஸ்பிரஸ் ரெயில், பகுதி ரத்து இல்லாமல் வழக்கம் போல எழும்பூர் ரெயில் நிலையத்தில் இருந்து இயக்கப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top