களைகட்டும் ‘சென்னை தினம்’: அமைச்சர்கள் பங்கேற்பு!!

சென்னை மாநகரில் ஆண்டுதோறும் சென்னை தினம் கோலாகலமாகக் கொண்டாடப்படுவது வழக்கமாக இருந்து வருகிறது. இந்நிலையில் கொரோனா பரவல் காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக சென்னை தினம் கொண்டாடப்படுவதற்கு அரசு தடை விதித்து இருந்தது.

இந்த சூழலில் 382 ஆண்டாக சென்னை தினம் நடப்பாண்டில் மீண்டும் களைகட்டியுள்ளது. அதன் ஒரு பகுதியாக சென்னை பெசன்ட் நகரில் “சென்னை தினம்” கொண்டாடப்பட்டு வருகிறது.

இந்நிகழ்ச்சியில் அமைச்சர் சேகர்பாபு, மேயர் பிரியா, நாடாளமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன், அமைச்சர் மா.சுப்பிரமணியன் உள்ளிட்டோர் ரிப்பன் வெட்டி விழாவை தொடங்கி வைத்துள்ளனர்.

சென்னை விழாவின் ஒரு பகுதியாக தோரணங்கள், வண்ண விளக்குங்கள் சாலையோரம் அமைக்கப்பட்டுள்ளது. அதோடு விளையாடுவதற்கு, உண்பதற்கு ஏற்றவாறு கடைகள் அமைக்கப்பட்டு இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது. மேலும், கலை நிகழ்ச்சிகளும் நடைபெற இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.