சென்னையில் சோகம்! மின்சாரம் பாய்ந்து தம்பதி அடுத்தடுத்து பலி!!

சென்னை கோடம்பாக்கம் அடுத்துள்ள ரத்தினம்மாள் அடுக்குமாடி குடியிருப்பு பகுதியில் வசித்து வருபவர் மூர்த்து ( வயது 78), பானுமது (வயது 76) தம்பதியினர்.

இவர்கள் வருமான வரித்துறை மற்றும் தடய அறிவியம் துறையில் பணியாற்றி ஓய்வுபெற்ற இவர்கள் தனிமையில் வசித்து வந்துள்ளனர்.

நடிகை ஆலியா பட்டிற்கு பெண் குழந்தை! ரசிகர்கள் வாழ்த்து..!!

இந்நிலையில் நேற்று இரவு 11 மணியளிவில் அடுக்குமாடி குடியிருப்பின் வெளிப்புற கேட் பூட்டுவதற்காக மூர்த்து சென்றுள்ளார். அப்போது மின்விளக்கு ஒயரில் மின்கசிவு ஏற்பட்டதால் கேட் முழுவதும் மின்சாரம் பாய்ந்துள்ளது.

அப்போது எதிர்பாராதவிதமாக மூர்த்தி மீது மின்சாரம் பாய்ந்துள்ளது. அதே சமயம் கணவரை காப்பாற்ற சென்ற பானுமதி மீது மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே இரண்டுபேரும் பரிதாபமாக உயிரிழந்தனர்.

காதலித்ததால் கொன்றேன்! கொடூர தந்தை பரபரப்பு வாக்குமூலம்!

இதனிடையே சம்பவம் குறித்து பொதுமக்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்து நிலையில் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

மேலும், விபத்து குறித்து அசோக் நகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment