
News
சென்னையில் குப்பை கொட்டினால் இத்தனை ஆயிரம் அபராதமா? மாநகராட்சி எச்சரிக்கை!
சென்னையில் குப்பை கொட்டினால் இத்தனை ஆயிரம் அபராதமா? மாநகராட்சி எச்சரிக்கை!
சென்னையில் குப்பை தொட்டிகளில் தவிர சாலைகளில் மற்றும் நீர்நிலைகளில் குப்பைகளை கொட்டினால் 100 ரூபாய் முதல் 5 ஆயிரம் ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும் என சென்னை மாநகராட்சி எச்சரிக்கை விடுத்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கடந்த சில மாதங்களாகவே சென்னை மாநகராட்சி தூய்மையான சென்னையை உருவாக்கும் முயற்சியில் உள்ளது என்பதும் அது குறித்து தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் சற்று முன்னர் சென்னை மாநகராட்சி தனது ட்விட்டர் பக்கத்தில் சென்னையில் உள்ள சாலைகளில் மற்றும் நீர் தடங்களில் குப்பைகளை கொட்டினால் அபராதம் எவ்வளவு என்பது என்பது குறித்த அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:
Hey Chennai
The waste you're disposing can be recycled. Help us maintain the city clean!
சிங்காரச் சென்னை தூய்மையான சென்னை!#NammaChennaiSingaraChennai#ThooimaiChennai #ChennaiCorporation pic.twitter.com/UE6e3afIUP— Greater Chennai Corporation (@chennaicorp) October 16, 2021
