இன்றைய தினம் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்ற கவுன்சிலர்கள் பதவி ஏற்பு பிரமாணம் நடைபெற்றுக் கொண்டு வருகிறது. இவை தமிழ்நாட்டில் உள்ள ஒட்டுமொத்த நகராட்சி, மாநகராட்சி, பேரூராட்சிகளிலும் இன்றைய தினமே வெற்றி பெற்ற வேட்பாளர்கள் பதவி ஏற்றுள்ளனர்.
இந்த நிலையில் தலைநகர் சென்னையில் பலரும் ஆச்சரியம் அடையதக்கதான தகவல் ஒன்று கிடைத்துள்ளது. அதன்படி சென்னை மாநகராட்சி மாமன்றத்தில் முதல் முறையாக ஆண்களைவிட அதிக பெண் உறுப்பினர்கள் இடம் பெற்றுள்ளனர்.
சென்னை மாநகராட்சி மாமன்றத்தில் திமுக உறுப்பினர்கள் 153 பேர், காங்கிரஸ் உறுப்பினர்கள் 13 பேர் உள்ளனர். மார்க்சிஸ்ட் உறுப்பினர்கள் நான்கு பேர், ஒரு இந்திய கம்யூனிஸ்ட் உறுப்பினர்கள் சென்னை மாநகராட்சி மாமன்றத்தில் உள்ளனர்.
மதிமுக 2 உறுப்பினர்கள், விடுதலை சிறுத்தைகள் கட்சியில் 4 உறுப்பினர்கள் சென்னை மாநகராட்சி மாமன்றத்தில் உள்ளனர். சென்னை மாநகராட்சியில் அதிமுகவில் 15 பேரும், பாஜக, அமமுக, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியில் இருந்து தலா ஒரு உறுப்பினர்கள் உள்ளனர்.
சென்னை மாநகராட்சி மாமன்றத்தில் திமுக 98 ஆண் உறுப்பினர்களும் 102 பெண் உறுப்பினர்களும் உள்ளனர். சென்னை மாநகராட்சி மாமன்றத்தில் தேமுதிக, பாமக ஆகிய கட்சிகளில் இருந்து யாரும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.