22 சுரங்கப்பாதைகளும் சரிசெய்யப்பட்டதா? சென்னை மாநகராட்சியின் முக்கிய அறிவிப்பு

சமீபத்தில் சென்னையில் பெய்த கனமழை காரணமாக 22 சுரங்கப் பாதையிலும் மழைநீர் தேங்கி இருந்த நிலையில் தற்போது அந்த 22 சுரங்கப் பாதைகளும் சரிசெய்யப்பட்டு போக்குவரத்து அனுமதிக்கப்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது

சமீபத்தில் பெய்த கனமழை காரணமாக சென்னை முழுவதும் வெள்ளத்தில் தத்தளித்து என்பதும் குறிப்பாக சுரங்க பாதைகளில் மழை நீர் தேங்கியதால் போக்குவரத்து தடைபட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இதனை அடுத்து போர்க்கால அடிப்படையில் சென்னை மாநகராட்சி அதிகாரிகள் சுரங்கப்பாதைகளில் தேங்கிய தண்ணீரை அகற்றும் பணியில் கடந்த சில நாள்களாக ஈடுபட்டு இருந்தனர் என்பதும் படிப்படியாக ஒவ்வொரு சுரங்கப் பாதையாக சரிசெய்யப்பட்டு போக்குவரத்துக்கு அனுமதிக்கப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் தற்போது வெள்ள நீரால் மூழ்கிய 22 சுரங்கப் பாதைகளும் சரி செய்யப்பட்டதாகவும் அனைத்து சுரங்கப் பாதையிலும் தற்போது போக்குவரத்து அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது. மேலும் சென்னை மாநகராட்சியில் கடந்த ஒரு வாரத்தில் 579 மரங்கள் கீழே விழுந்ததாகவும் அந்த மரங்கள் முழுவதும் அகற்றப்பட்டதாகவும் தகவல் தெரிவித்துள்ளது

 

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment