
தமிழகம்
சென்னையில் திடீர் பரப்பு… வரிசையாக 256 கடைகளுக்கு சீல்!
சென்னையில் 256 கடைகளுக்கு திடீரென சீல் வைக்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பைக் கிளப்பியுள்ளது.
சென்னையில் குண்டூசி முதல் கம்யூட்டர் வரை அனைத்துமே ஒரே இடத்தில் கிடைக்கும் பகுதியாக பாரிமுனை எனப்படும் பாரிஸ் கார்னர் திகழ்ந்து வருகிறது. இங்கு ஏராளமான வியாபாரிகள் சிறிய அளவிலான கடைகளில் வியாபாரம் செய்து வருகின்றனர்.
இந்நிலையில் இங்கு அமைத்துள்ள சென்னை மாநகராட்சிக்கு சொந்தமான 256 கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது.
சென்னை உயர்நீதிமன்றத்திற்கும் ராஜா அண்ணாமலை மன்றத்திற்கும் எதிரில் உள்ள உள்ள வடக்குக் கோட்டை சாலையில் அமைந்திருக்கும் பெருநகர சென்னை மாநகராட்சிக்கு சொந்தமான வணிக வளாகத்தில் பல்வேறு வகையான பொருட்கள் விற்கும் கடைகள் இயங்கி வருகின்றன.
இந்த கடைகளில் முறையாக வாடகை செலுத்தாமல் நீண்ட காலமாக நிலுவையில் இருந்து வந்த சுமார் 256 கடைகளுக்கு இன்று காலை சீல் வைக்கப்பட்டுள்ளது. அனைத்து கடைகளுக்கும் சேர்த்து மொத்தம் 60 லட்சம் நிலுவையில் உள்ளது என மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
