News
சென்னையில் மட்டும் ஸ்விக்கி, ஜொமைட்டா நிறுவனங்களுக்கு அனுமதி!

கொரோனா வைரஸ் பீதி காரணமாக தற்போது அமல்படுத்தப்பட்டுள்ள 144 தடை உத்தரவு காரணமாக ஆன்லைன் உணவு டெலிவரி நிறுவனங்களான ஸ்விக்கி, ஜொமைட்டோ, உபேர் உள்ளிட்ட நிறுவனங்களுக்கும் உணவு டெலிவரி செய்ய அனுமதி இல்லை என்பது தெரிந்ததே
இந்த நிலையில் மக்களின் பசியை போக்கும் வகையில் ஆன்லைன் உணவு டெலிவரி நிறுவனங்களான ஸ்விக்கி, ஜொமைட்டோ, உபேர் உள்ளிட்ட நிறுவனங்களுக்கு சென்னை மாநகராட்சி தற்போது அனுமதி அளித்துள்ளது
ஆனால் அதே நேரத்தில் உணவுகளை டெலிவரி செய்யும் நபர்கள் மாஸ்க், கையுறை அணிந்து விதிமுறைகளை கடைபிடிக்க வேண்டும் என்று மாநகராட்சி அறிவுறுத்தியுள்ளது. அதேபோல் மளிகைப் பொருட்களையும் வீடுகளுக்கு விநியோகம் செய்ய அனுமதி அளிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
