செஸ் ஒலிம்பியாட் போட்டி: விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு!!

ஜூலை மாதம் மாமல்லபுரத்தில் செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெற உள்ளது. முன்னதாக இந்த செஸ் ஒலிம்பியாட் போட்டி ரஷ்யாவில் நடைபெற இருப்பதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் ரஷ்யா தொடர்ந்து போர் புரிந்து வருவதால் செஸ் ஒலிம்பியாட் தலைநகர் சென்னைக்கு மாற்றப்பட்டது.

இதனால் சென்னை  மாமல்லபுரத்தின் சுற்றுவட்டாரப் பகுதியிலுள்ள அனைத்து ஹோட்டல் ரூம்களும் புக் செய்யப்பட்டுள்ளதாக காணப்படுகின்றன.

இந்த நிலையில் செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கு பதிவு செய்ய அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை மாமல்லபுரத்தில் நடைபெற்ற உள்ள செஸ் ஒலிம்பியாட் போட்டியில் பங்கேற்க ஜூன் 27ஆம் தேதி வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

செஸ் ஒலிம்பியாட் போட்டியில் பங்கேற்க இதுவரை 174 நாடுகள் முன்பதிவு செய்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. இதுவரை 174 ஆண்கள் அணியும் 145 பெண்கள் அணியும் செஸ் ஒலிம்பியாட் போட்டியில் பங்கேற்க பதிவு செய்துள்ளனர்.

இதனால் போட்டியாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.