சென்னையில் புத்தக கண்காட்சி எப்போது? புத்தக பிரியர்களுக்கு ஒரு மகிழ்ச்சி தகவல்!

சென்னையில் ஒவ்வொரு ஆண்டும் புத்தக கண்காட்சி நடைபெறும் என்பதும் இந்த கண்காட்சியை லட்சக்கணக்கான மக்கள் கண்டு களிப்பார்கள் என்பதும் ஆயிரக்கணக்கான புத்தகங்கள் விற்பனை ஆகும் என்பதும் தெரிந்ததே.

கொரோனா வைரஸ் பாதித்த ஆண்டுகள் தவிர மற்ற அனைத்து ஆண்டுகளிலும் சென்னையில் புத்தக கண்காட்சி நடைபெற்று வரும் நிலையில் இந்த ஆண்டும் புத்தகக் கண்காட்சியை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதுகுறித்து பபாசி சார்பில் முதலமைச்சரிடம் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளதாகவும் புத்தகக் காட்சியை தொடங்கி வைக்க முதல்வர் வருவதற்கு அதிக வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.

book fair

இந்த நிலையில் 46 ஆவது சென்னை புத்தகக் கண்காட்சி வரும் ஜனவரி 6ஆம் தேதி முதல் 22-ம் தேதி வரை நடைபெற வாய்ப்பு இருப்பதாகவும் இது குறித்த அறிவிப்பு இன்னும் ஒரு சில நாட்களில் அதிகாரப்பூர்வமாக வெளிவரும் என்றும் கூறப்படுகிறது.

ஏற்கனவே உலக அளவில் புத்தக கண்காட்சியை நடத்த தமிழக அரசு திட்டமிட்டுள்ள நிலையில் சென்னை புத்தகக் கண்காட்சி புத்தக பிரியர்களுக்கு ஒரு நற்செய்தியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

உலகம் முழுவதும் இன்டர்நெட் மிக வேகமாக பரவி ஆன்லைனிலேயே தற்போது அதிகமாக புத்தகம் வாசிக்கும் பழக்கம் இருந்தாலும் புத்தகத்தை கையில் பிடித்து வாசிப்பது என்பது ஒரு தனி அனுபவம் என்றும் எனவே புத்தகக் கண்காட்சியை நாங்கள் மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கிறோம் என்றும் புத்தக பிரியர்கள் தெரிவித்துள்ளனர்.

எனவே வழக்கம்போல் இந்த ஆண்டும் சென்னை புத்தக கண்காட்சி மிகப் பெரிய வரவேற்பை பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.