76 கிமீ-ல் சென்னையில் ஒரு பாம்பன் பாலம்!

ராமேஸ்வரத்தில் பாம்பன் பாலம் மிகவும் கம்பீரமாக செயல்பட்டு வருவது போல் சென்னையிலும் ஒரு பாம்பன் பாலம் உருவாக்க இருப்பதாக வெளிவந்திருக்கும் செய்தி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை துறைமுகம் முதல் மணலி சாலை திருவொற்றியூர் சந்திப்பு வரை கடல் பாலம் அமைக்க வேண்டும் என தமிழக அரசு மத்திய அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளது. தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் கடந்த ஜூன் மாதம் பிரதமர் மோடியை சந்தித்து பேசினார். அப்போது சென்னை கடல் பாலத்தை விரைவில் தொடங்குமாறு அவர் பிரதமரிடம் கோரிக்கை விடுத்தார். இதுகுறித்து அடிக்கடி அவர் கடிதம் எழுதியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் சென்னை துறைமுக வளர்ச்சிக்கும் பெருகி வரும் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தவும் சென்னை துறைமுகம் முதல் மதுரவாயில் வரை இரண்டடுக்கு மேம்பால பணிகள் தற்போது தொடங்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

அதேபோல் சென்னை துறைமுகம் முதல் மணலி சாலை திருவொற்றியூர் வரை கடல் பாலம் அமைந்துவிட்டால் போக்குவரத்து நெரிசல் சாலை விபத்துகள் ஆகியவை தவிர்க்கப்படும் கூறப்படுகிறது. இந்த கடல் பாலம் அமைந்துவிட்டால் ராமேஸ்வரத்தில் உள்ள பாம்பன் பாலம் போல் சென்னையிலும் ஒரு பாம்பன் பாலம் அமையும் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment