சென்னை பெங்களூர் இடையிலான டபுள் டக்கர் ரயில் கர்நாடகாவின் பங்காருபேட்டை அருகே தடம் புரண்டு விபத்து ஏற்பட்டது.
இன்று காலை சுமார் 11:30 மணியளவில், ரயில் எண். 22625 டாக்டர் எம்ஜிஆர் சென்னை சென்ட்ரல் – கேஎஸ்ஆர் பெங்களூரு டபுள் டெக்கர் எக்ஸ்பிரஸ் ரயில் பெட்டியின் 1 ஜோடி சக்கரம் (பின்புறத்தில் இருந்து 2வது பெட்டி), பிசாநத்தம் நிலையத்தில் (பங்காரப்பேட்டையில் இருந்து சுமார் 20 கிமீ தொலைவில்) தடம் புரண்டது. சென்னையில் இருந்து பெங்களூரு நோக்கி ரயில் வந்து கொண்டிருந்தது.
உடனடியாக பெங்களூரு கோட்டத்தின் மூத்த அதிகாரிகள் விபத்து நிவாரண ரயிலுடன் (ART) மீட்புக்காக விரைந்துள்ளனர். பொது மேலாளர் ஸ்ரீ சஞ்சீவ் கிஷோர் மற்றும் SWR இன் மூத்த அதிகாரிகள், மண்டல தலைமையகம், ஹூப்பள்ளியில் உள்ளனர் மற்றும் ஹூப்பள்ளியில் உள்ள பேரிடர் மேலாண்மை பிரிவில் இருந்து நிலைமையை கண்காணித்து வருகின்றனர்.
முன் பகுதி, அதாவது ரயிலின் பாதிக்கப்படாத பகுதி அனைத்து பயணிகளுடன் பங்காரப்பேட்டைக்கு புறப்பட்டது. தடம் புரண்ட C1 பெட்டியின் பயணிகள் C2,C3&C4 இல் பயணிக்க ஏற்பாடு செய்யப்பட்டது.
சீரமைப்பு பணிகள் வேகமாக நடந்து வருவதாக ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.
பயணிகள்/பொதுமக்களின் வசதிக்காக கே.எஸ்.ஆர் பெங்களூரு, பெங்களூரு கேன்ட் மற்றும் பங்காரப்பேட்டை நிலையங்களில் உதவி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்.