Connect with us

மைக்ரோசாப்ட், கூகுள் நிறுவன ஊழியர்களுக்கு பாடமெடுக்கும் சென்னை ஆட்டோ ஓட்டுனர்!

annadurai

செய்திகள்

மைக்ரோசாப்ட், கூகுள் நிறுவன ஊழியர்களுக்கு பாடமெடுக்கும் சென்னை ஆட்டோ ஓட்டுனர்!

மைக்ரோசாப்ட், கூகுள் நிறுவன ஊழியர்களுக்கு பாடமெடுக்கும் சென்னை ஆட்டோ ஓட்டுனர்!

நம் தமிழகத்தைப் பொறுத்தவரை படிக்காத மேதைகள் அதிகமாகவே காணப்படுகின்றனர். அதிலும் கல்வி கண் திறந்த காமராஜர் படிக்காத மேதை என்றும் அழைத்தார்கள். இந்நிலையில் ஆட்டோ ஓட்டுநர் ஒருவர் ஐடி ஊழியர்களுக்கு வகுப்பு எடுக்கும் நிகழ்வு அரங்கேறியுள்ளது.

அதன்படி மைக்ரோசாப்ட், கூகுள் போன்ற நிறுவன ஊழியர்களுக்கு வாடிக்கையாளர் சேவை குறித்து வகுப்பெடுக்கிறார் ஆட்டோ ஓட்டுனர். சென்னையை சேர்ந்த ஆட்டோ ஓட்டுனர் அண்ணாதுரை மைக்ரோசாஃப்ட் ஊழியர்களுக்கு கற்பிக்கும் அளவிற்கு உயர்ந்துள்ளார்.

தனது ஆட்டோவில் வாடிக்கையாளர்களுக்காக லேப்டாப், ஐபேட், வாசிக்க பத்திரிகைகள் வைத்துள்ளார் அண்ணாதுரை. ஆட்டோவில் பயணம் செய்யும் வாடிக்கையாளர்கள் குடிக்க குட்டி ஃப்ரிட்ஜில் குளிர்ந்த நீர் வைத்துள்ளார் ஆட்டோ ஓட்டுனர் அண்ணாதுரை.

வாடிக்கையாளர்களுக்கு இலவசமாக வழங்க பிஸ்கட் போன்ற தின்பண்டங்களை தயாராக வைத்துள்ளதாக கூறுகிறார் ஆட்டோ ஓட்டுனர் அண்ணாதுரை. வாடிக்கையாளர்கள் தான் எஜமானர்கள் என்பதால்தான் பல வசதிகளை செய்து கொடுத்து உள்ளதாக அண்ணாதுரை கூறுகிறார்.

வாடிக்கையாளர்கள் பயன் படுத்த தன் ஆட்டோவில் வைபை வசதியும் செய்து உள்ளதாக கூறுகிறார் ஆட்டோகாரர் அண்ணாதுரை. வாடிக்கையாளர்களுக்கு தான் காத்திருந்த நிலை மாறி தன் ஆட்டோவுக்கு அவர்கள் காத்திருக்கின்றனர் என்றும் அண்ணாதுரை கூறினார். அண்ணாதுரை புகழ் பரவியதை அடுத்து வாடிக்கையாளர் சேவை பற்றி கற்பிக்க கூகுள் போன்ற நிறுவனங்கள் அவரை அழைத்துள்ளன.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in செய்திகள்

To Top