சென்னையில் மீண்டும் கனமழை-நாளை மறுநாள் வரை நீடிக்கும்! இதர மாவட்டங்களில் மாலை 4 மணி வரை மழை!!

கடந்த சில நாட்களாக தமிழகத்தில் வடகிழக்கு பருவமழையின் தீவிரம் அதிகமாக காணப்பட்டது. இதனால் தமிழகத்தில் உள்ள பெருவாரியான மாவட்டங்களை நீருக்குள் மூழ்கியது.

மழை

குறிப்பாக தலைநகரான சென்னை மழை நீரில் தத்தளித்தது. இவ்வாறிருக்கையில் கடந்த இரண்டு நாட்களாக சென்னையில் மழை குறைந்து காணப்பட்டது. இந்த நிலையில் தற்போது சென்னையில் கனமழை பெய்ய தொடங்கியதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

வானிலை மையம்

அதன்படி சென்னையில் கோடம்பாக்கம், ஈக்காட்டுத்தாங்கல் உள்ளிட்ட இடங்களில் கனமழை பெய்ய தொடங்கியுள்ளது. நுங்கம்பாக்கம், புரசைவாக்கம், வடபழனி,கேளம்பாக்கம், டி.நகர், அண்ணா நகர் உள்ளிட்ட பகுதிகளில் பரவலாக மழை பெய்து கொண்டிருக்கிறது.

சென்னையில் நாளை மறுநாள் வரை கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. அதோடு மட்டுமல்லாமல் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் மாலை 4 மணி வரை மழை பெய்யலாம் என்று வானிலை மையம் கூறியுள்ளது.

வேலூர், ராணிப்பேட்டை, விழுப்புரம், கடலூர், நாகை,புதுக்கோட்டையிலும் மாலை 4 மணி வரைக்கும் மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் கூறியுள்ளது. செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, திருவாரூர் மாவட்டங்களில் பல இடங்களில் மழை பெய்து வருகிறது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment