விபத்தில் உயிரிழந்தவரை வேடிக்கை பார்த்தவர் திடீர் மரணம்.. அதிர்ச்சியில் போலிஸார்!

சென்னையில் விபத்தில் உயிரிழந்த ஒருவரை வேடிக்கை பார்த்த இன்னொருவர் திடீரென மரணம் அடைந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை போரூர் அருகே யோவான் என்பவர் தனது பணியை முடித்துவிட்டு வீட்டுக்கு திரும்பிக் கொண்டிருந்த நிலையில் திடீரென வேகமாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் ஒன்று அவர் மீது மோதியது.

இதில் படுகாயம் அடைந்த யோவான் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து கேள்விப்பட்ட போலீசார் உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்து யோவான் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

acciden1இந்த பணி நடந்து கொண்டிருக்கும் போது அதே பகுதியைச் சேர்ந்த தங்கராஜ் என்பவர் தனது இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்தார். அவர் வாகனத்தில் செல்லும் போது ஏற்கனவே விபத்தில் இருந்து உயிர் இழந்த வரை வேடிக்கை பார்த்துக்கொண்டே சென்றார். அப்போது எதிர்பாராதவிதமாக அவர் சென்ற வாகனமும் விபத்துக்குள்ளானது.

இதில் தங்கராஜ் பரிதாபமாக உயிரிழந்தார். விபத்தில் உயிரிழந்தவரை வேடிக்கை பார்த்துக் கொண்டே இரு சக்கர வாகனத்தை ஓட்டி சென்ற அவர் பரிதாபமாக பலியான சம்பவம் போலீசாரை அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனை அடுத்து தங்கராஜ் உடலை போரூரில் உள்ள மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக போலீசார் அனுப்பி வைத்தனர். ஒரே இடத்தில் இருவர் அடுத்தடுத்து விபத்தில் பலியானார்கள் என்பதும் இருவருமே அரசு ஊழியர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.