சென்னையில் பரபரப்பு!! ஏசி வெடித்து 2 பேர் உயிரிழப்பு..!!!

கடந்த சில நாட்களாகவே நம் தமிழகத்தை பொறுத்த வரையில் விபத்துக்கள் என்பது தொடர்ந்து அதிகரித்து வருகிறது. குறிப்பாக ஏசி வெடித்து விபத்துக்குள்ளாகும் சம்பவம் தொடர்கதையாகி வருகிறது.

அந்த வகையில் கிண்டியில் ஏசி பழுது பார்க்கும் போது வாயு கசிந்து, வெடித்து விபத்துக்குள்ளான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை அடுத்துள்ள அம்பேத்கார் நகரில் இருக்கும் தனியார் நிறுவனத்தில் ஏசி பழுதாகியுள்ளது.

இதன் காரணமாக சின்னதுரை, இந்திரகுமார், சரவணன் ஆகிய ஏசி மெக்கானிக்களை அந்நிறுவனம் ஏசியை சரிசெய்ய அழைத்துள்ளனர். அப்போது 3 பேரும் பணியில் இருந்துள்ளனர்.

இந்நிலையில் திடீரென ஏசியில் இருந்து வாயு கசிந்து பயங்கரமாக வெடித்தது. இதில் 3 இளைஞர்களும் படுகாயமடைந்த நிலையில் , மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

தற்போது சின்னதுரை, இந்திரகுமார் ஆகிய இருவரும் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment