
தமிழகம்
செங்கல்பட்டு விபத்து: பலி எண்ணிக்கை 7ஆக உயர்வு!!!
தமிழகத்தில் சாலை விபத்துக்கள் என்பது கடந்த சில நாட்களாகவே அதிகரித்து வருகிறது. இதனால் விபத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையும் தொடர்கதையாகி வருகிறது.
அந்த வகையில் நேற்று முன்தினம் செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே லாரி மீது அரசு பேருந்து வேகமாக மோதியதில் அப்பளம் போல் நொறுங்கி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 2 பெண்கள் உட்பட 6 பேர் பலியானதாக கூறப்படுகிறது.
அதே போல் 10-க்கும் மேற்பட்டவர்கள் படுகாயம் அடைந்தநிலையில் பஸ் டிரைவர் தலைமறைவானார். இந்த விபத்து குறித்து கீழ்ப்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து தற்போது விசாரணை நடத்தி வந்தனர்.
இந்நிலையில் தற்போது பலியானவர்களின் எண்ணிக்கையானது 7 ஆக அதிகரித்துள்ளது. அதே போல் தலைமறைவாக இருந்த அரசு பஸ் டிரைவர் முரளி இன்று காலை அச்சரப்பாக்கம் காவல் நிலையத்தில் சரணடைந்தார்.
மேலும், அரசு பஸ் டிரைவரை போலீசார் மதுராந்தகம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
