Connect with us

செங்கல்பட்டு விபத்து: பிரதமர் மோடி இரங்கல்!!

202112181103494775 Prime Minister Modi is reportedly coming to Chennai to open SECVPF

செய்திகள்

செங்கல்பட்டு விபத்து: பிரதமர் மோடி இரங்கல்!!

தமிழகத்தில் சாலை விபத்துக்கள் என்பது கடந்த சில நாட்களாகவே அதிகரித்து வருகிறது. இதனால் விபத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையும் தொடர்கதையாகி வருகிறது.

அந்த வகையில் இன்றைய தினத்தில் செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே லாரி மீது அரசு பேருந்து வேகமாக மோதியதில் அப்பளம் போல் நொறுங்கி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 2 பெண்கள் உட்பட 6 பேர் பலியானதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் 10-க்கும் மேற்பட்டவர்கள் படுகாயம் அடைந்ததாக கூறப்படுகிறது. இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இந்த விபத்து குறித்து கீழ்ப்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து தற்போது விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த சூழலில் சாலை விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். விபத்தில் காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய இறைவனை பிரார்த்திப்பதாக கூறியுள்ளார்.

மேலும், சாலை விபத்தில் 6  பேர் உயிரிழந்து  இருப்பது மிகுந்த வருத்தை அளிப்பதாக தெரிவித்துள்ளார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in செய்திகள்

To Top