தேனியில் கேன்சர் நோயை அடையாளம் காணும் வேதியியல் ஆய்வகம் திறப்பு!

தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் எந்த வகையான புற்றுநோய் என்பதை கண்டறியும் நவீன வேதியியல் ஆய்வகத்தை  மருத்துவக் கல்வி இயக்குநர் திறந்து வைத்தார்.

தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் மனித உடலில் ஏற்படும் கட்டிகள், சாதாரண கட்டிகளா? பாதிப்பை ஏற்படுத்தும் புற்றுநோய் கட்டிகளா? என்பதை கண்டறிய திசு பகுப்பாய்வு நோய்குறியியல் துறை செயல்பட்டு வருகிறது.

ஆனால் கண்டறிந்த புற்றுநோய் எந்த வகையை சேர்ந்தது? என்பதை வகைப்படுத்த எதிர்ப்பு திசு வேதியியல் ஆய்வகத்தில் மட்டுமே கண்டறியமுடியும்.

இதுவரையில் தேனி அரசு மருத்துவமனையில் இருந்து நோயாளிகளில் சேகரிக்கப்பட்ட திசுக்கள் மதுரை ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து எதிர்ப்பு திசு வேதியியல் துறையில் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டு வந்தது.

இந்நிலையில் தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையிலேயே புற்றுநோய்களை வகைப்படுத்தும் எதிர்ப்பு திசு வேதியியல் ஆய்வகத்தை திறக்க அரசு முடிவு செய்தது.

அதன்படி அரசு மருத்துவக்கல்லூரி நோய்க்குறியியல் துறையில் அதிநவீன எதிர்ப்பு திசு வேதியியல் ஆய்வகம் தொடங்கப்பட்டுள்ளது.

இந்த ஆய்வகத்தை மருத்துவக்கல்வி இயக்குநரும், தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துமனை முதல்வருமான டாக்டர் மீனாட்சி சுந்தரம் திறந்து வைத்தார்.

இந்த நவீன ஆய்வகத்தின் மூலம் தேனி மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு மருத்துவமனைகளில் இருந்தும் பெறப்படும் திசுக்களுக்கும், திசு பகுப்பாய்வு மற்றும் எதிர்திசு வேதியியல் பரிசோதனையும் செய்து முடிவுகள் வழங்கப்படும் என்றும் இதன்மூலம் தேனி மாவட்டத்தில் உள்ள அனைத்து தாலுகா மருத்துவமனைகளுக்கு வரும் நோயாளிகள் பயனடைவார்கள்

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.