Connect with us

பரபரப்பு!! சென்னையில் Chemical Barrel வெடித்து பயங்கர தீ விபத்து;;

202201211529568809 Tamil News Thirupathur News Set fire to the hotel SECVPF

தமிழகம்

பரபரப்பு!! சென்னையில் Chemical Barrel வெடித்து பயங்கர தீ விபத்து;;

சென்னை வில்லிவாக்கத்தில் பெயின்ட் கலவைக்கு பயன்படுத்தும் Chemical Barrel வெடித்து தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

கடந்த சில நாட்களாகவே தமிழகத்தில் தீ விபத்துகள் என்பது தொடர்ந்து வண்ணமாகவே உள்ளது. அந்த வகையில் தற்போது சென்னை வில்லிவாக்கத்தில் அமைந்திருக்கும் சிட்கோ தொழிற்சாலையில் இன்று பயங்கர தீ விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் மொத்தம் 14 Chemical Barrel குடோனில் சேமித்து வைக்கப்பட்ட சூழலில் 2 Chemical Barrel வெடித்து தீ பற்றியுள்ளது. இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் நீண்ட நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்ததாக கூறப்படுகிறது.

பின்னர் 10 Chemical Barrel பத்திரமாக மீட்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதேப்போல் அப்பகுதியில் குடியிருப்பு பகுதிகள் இருப்பதால் அதிகமான கரும்புகை வெளியேறி பொதுமக்களுக்கு கண் எரிச்சல், குமட்டல் போன்ற பாதிப்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

மேலும், தீ விபத்து குறித்து வில்லிவாக்கம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விபத்தில் ஊழியர் ஒருவர் காயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in தமிழகம்

To Top