செம்பரப்பாக்கம் ஏரியில் இருந்து உபரிநீர் வெளியேற்றம் அதிகரிப்பு: 2015 திரும்புகிறதா?

செம்பரம்பாக்கம் ஏரியில் அதிக அளவு உபரிநீர் திறந்துவிடப்பட்டதால் கடந்த 2015ஆம் ஆண்டு திரும்புகிறதோ என்ற அச்சம் சென்னை மக்கள் மனதில் ஏற்பட்டுள்ளது
சென்னை உள்பட தமிழகம் முழுவதும் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. வடகிழக்கு பருவமழை மற்றும் மேலடுக்கு சுழற்சி காரணமாக பெய்து வரும் இந்த மழையால் சென்னையே வெள்ளத்தில் தத்தளித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் இன்று பகல் ஒன்று முப்பது மணிக்கு செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து வினாடிக்கு 500 கனஅடி உபரி தண்ணீர் திறந்து விடப்படுவதாக பொதுப்பணித் துறை அறிவித்து இருந்தது. ஆனால் ஏரிக்கு நீர் வரும் நீர்வரத்து அதிகரித்ததால் ஆயிரம் கன அடியாக உபரிநீர் வெளியேற்றுவது உயர்த்தப்பட்டது என்பதும் அதன் பின்னர் வெளியேற்றப்படும் உபரி நீரின் அளவு 2,000 கன அடியாக உயர்த்த பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து அதிக அளவு நீர் வெளியேற்றப்படுவதால் சென்னையின் பல பகுதிகள் வெள்ளத்தில் மிதக்கும் வாய்ப்பு இருப்பதாக அஞ்சப்படுகிறது. கடந்த 2015ஆம் ஆண்டும் இதே போன்று உபரி நீரை அதிக அளவில் திறக்கப்பட்டதால் சென்னையின் பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியது என்பது குறிப்பிடத்தக்கது.

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on pinterest
Share on whatsapp
Share on telegram
Share on email
Share on print