ஹஜ் பயணம்: கொச்சி வேண்டாம் அது ரொம்ப சிரமம்! பிரதமருக்கு முதல்வர் கடிதம்!

இஸ்லாமியர்களின் புனித பயணமாக காணப்படுவது ஹஜ் பயணம். இந்தியாவிலிருந்து கடந்த சில வருடங்களாக 21 விமான நிலையங்கள் மூலம் இந்த ஹஜ் பயணம் மேற்கொள்ளப்படும்.

ஸ்டாலின்

இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு மத்திய அரசு இந்த 21 விமான நிலையங்களில் எண்ணிக்கையை குறைத்து இருந்தது. அதில் திருச்சி,சென்னை உட்பட்ட விமான நிலையங்களின் பெயர்கள் நிராகரிக்கப்பட்டது.

இதற்கு தமிழகத்தில் எதிர்ப்புகள் அதிகம் வந்தன. இது குறித்து தமிழக முதல்வர்  ஸ்டாலின் பாரத பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில் ஹஜ் புனித யாத்திரைக்கு சென்னை விமான நிலையத்திலிருந்து செல்லும் நடைமுறை தொடர வேண்டும் என்று வற்புறுத்தியுள்ளார்.

ஸ்டாலின்

2022 ஆம் ஆண்டு ஹஜ் புனித பயணம் குறித்த அறிக்கையில் சென்னை விமானநிலையம் பெயர் இடம்பெறவில்லை என்று முதல்வர் ஸ்டாலின் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். தமிழகத்தைச் சேர்ந்த யாத்ரீகர்களுக்கு கொச்சி விமான நிலையத்தை ஒதுக்கியது மிகுந்த சிரமத்தை கொடுத்துள்ளதாக அவர் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

யாத்ரீகர்களுக்கு பயனளிக்கும் வகையில் சென்னை விமான நிலையத்தில் இருந்து புறப்பட அனுமதி தர வேண்டும் என்று தமிழக முதல்வர் ஸ்டாலின், பாரத பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதத்தின் மூலம் வலியுறுத்தியுள்ளார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment