முதல்வரால் வார்டு கவுன்சிலரை கூட கட்டுப்படுத்த முடியவில்லை!!

கடந்த சில நாட்களாக திராவிட முன்னேற்றக் கழகத்தின் பதவியில் இருப்பவர்களின் செயல்பாடுகள் மக்களிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. அதிலும் குறிப்பாக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி சென்னையில் நடந்த கூட்டத்தில் இலவச பேருந்து திட்டத்தை ஓசி பஸ் என்று கூறி இழிவாக பேசியது இன்றுவரையும் எதிர்க்கட்சி மற்றும் இதர எதிர்க்கட்சியினர்களால் விமர்சனம் செய்யப்படுவதாக காணப்படுகிறது.

இவ்வாறு உள்ள நிலையில் முதலமைச்சரால் அமைச்சர்களை மட்டுமின்றி கவுன்சிலர்கள் கூட கட்டுப்படுத்த முடியாது என்று அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் கூறியுள்ளது பெரும் பரபரப்பை உண்டாக்கி உள்ளது.

சென்னையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் அவர் இவ்வாறு கூறியுள்ளார். இன்றைய தினம் தமிழகத்தின் மின்சார கட்டண உயர்வை கண்டித்து அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தினர் சென்னை திருநெல்வேலி, திருச்சி, சேலம் ஆகிய மாவட்டங்களில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு கொண்டு வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment