கன்னத்தில் அறைந்த விவகாரம்! பத்தாண்டுகளுக்கு எந்த விழாவிலும் கலந்து கொள்ள தடை!!
கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு அமெரிக்காவில் 94வது ஆஸ்கர் விருது விழா நடைபெற்றது. இதில் ஏராளமான நடிகர் நடிகைகள் கலந்து கொண்டனர். இந்த விழாவில் சிறந்த நடிகருக்கான விருது வில் ஸ்மித்துக்கு கிடைத்தது.
ஆனால் இதில் வில் ஸ்மித் செய்த செயல் அனைவரையுடம் பெரும் சர்ச்சையையும் பரபரப்பையும் உண்டாக்கியது. ஏனென்றால் நடிகர் வில் ஸ்மித் மேடையில் தொகுப்பாளராக இருந்த கிறிஸ் ராக்கை கன்னத்தில் ஓங்கி அறைந்தார்.
இதனால் நடிகர் வில் ஸ்மித் மீது சட்ட ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படுமா என்று ஆலோசனை நடத்தப்பட்டது. இந்த நிலையில் நடிகர் வில் ஸ்மித் அடுத்த 10 ஆண்டுகளில் ஆஸ்கர் விருது விழாவில் கலந்து கொள்ள தடை விதித்தது.
அதன்படி ஆஸ்கர் விருது விழா நிகழ்ச்சிகளில் ஹாலிவுட் நடிகர் வில் ஸ்மித் பங்கேற்க 10 ஆண்டுகள் தடை விதித்தது ஆஸ்கார் அமைப்பு .ஆஸ்கர் விருது விழாவில் தொகுப்பாளராக இருந்த கிறிஸ் ராக்கை கண்ணத்தில் அறைந்தால் இத்தகைய நடவடிக்கை எடுத்துள்ளது
