இந்தியாவைப் பொறுத்தவரை அன்னையர் தினம் என்பது பெற்ற அம்மாக்களை கெளரவிப்பது மட்டுமல்ல, பாட்டி, வளர்ப்புத்தாய், பாசம் காட்டி வளர்ந்த சித்திகள், அத்தைகள் உள்ளிட்ட அனைவருக்குமானதாக உள்ளது.
அன்னையர் தினத்தில் நம்மை நேசிக்கும் பெண்களை கெளரவிக்கும் வகையில் மலர்கொத்து, வாழ்த்து அட்டைகள், சாக்லேட், நகைகள், புடவைகள் ஆகியவற்றை பரிசளிப்போம். உங்களுடைய அன்பு, பாராட்டு, நன்றியுணர்வை காட்டக்கூடிய சில சிறப்பு வாய்ந்த பரிசுகள் குறித்து பார்க்கலாம்…
1. டிஜிட்டல் கிப்ட்:
தற்போதைய ஆன்லைன் யுகத்தில் டிஜிட்டல் சம்பந்தப்பட்ட கிப்ட்கள் சிறந்த தேர்வாகும். உங்கள் அம்மாவுக்கு பிடித்த அல்லது அவர் நீண்ட நாட்களாக வாங்க ஆசைப்படும் ஆன்லைன் ஸ்டோரில் இருந்து மின்-பரிசு அட்டைகள், பொழுதுபோக்கு அல்லது ஸ்ட்ரீமிங் தளங்களுக்கான சந்தா சேவைகள் அல்லது அவள் ரசிக்கக்கூடிய மின் புத்தகங்கள் அல்லது ஆடியோபுக்குகளை பரிசளிக்கலாம்.
2. போட்டோ கிப்ட்:
தற்போது போட்டோக்களை வைத்து ஸ்பெஷலாக வடிவமைக்கப்பட்ட ஏராளமான கிப்ட்கள் ஆன்லைனில் உடனடியாக கிடைக்கிறது. உங்கள் அம்மா அல்லது அன்புக்குரியவர் உள்ள புகைப்பட ஆல்பம், காலெண்டர், காபி கப் போன்றவற்றை சிறப்பாக டிசைன் செய்து பரிசளிக்கலாம்.
3. ஆன்லைன் கோர்ஸ்:
உங்கள் அம்மாவை அவருக்கு பிடித்த ஆன்லைன் வகுப்புகளில் சேர்த்துவிடலாம். சமையல், ஓவியம், உடற்பயிற்சி, யோகா, கைவினைக்கலை போன்ற ஏதாவது ஒரு மெய்நிகர் வகுப்பில் சேர்த்துவிடலாம்.
4. சப்ஸ்கிரிப்ஷன் பாக்ஸ்:
உங்கள் அம்மாவின் விருப்பத்திற்கு அழகு கலை, சரும பராமரிப்பு, உணவு, ஸ்நாக்ஸ், புத்தகம், தோட்டக்கலை உள்ளிட்ட தீம்களின் அடிப்படையில் சப்ஸ்கிரிப்ஷன் பாக்ஸ்களை பரிசளிக்கலாம்.
5.வீட்டில் சமைக்கப்பட்ட உணவு:
உங்களுக்கு நேரம் இருந்தால், உங்கள் அம்மாவுக்கு ஏதாவது பிரத்யேகமாக எதையாவது நீங்கள் உங்கள் கையால் சமைத்து கொடுக்கலாம். உணவுடன் கையால் எழுதப்பட்ட கவிதைகள், அம்மாவை பாராட்டும் படியான நோட்ஸ் ஆகியவற்றையும் தட்டில் வைத்து அலங்கரித்து கொடுக்கலாம்.
6. விர்ச்சுவல் டைம்:
உங்கள் அம்மாவுடன் விர்ச்சுவல் ஹேங்கவுட் அல்லது வீடியோ அழைப்பைத் திட்டமிடுங்கள். நீங்கள் விர்ச்சுவல் புருன்ச் சாப்பிடலாம், ஸ்ட்ரீமிங் சேவையைப் பயன்படுத்தி ஒரு திரைப்படத்தை ஒன்றாகப் பார்க்கலாம் அல்லது வீடியோ காலில் கதை அடிக்கலாம். இது உங்கள் அம்மாவிற்கு மன நிறைவுடன் மகிழ்ச்சியைத் தரும்.
7. அம்மாவுக்கு ஹெல்ப் பண்ணுங்க:
உங்கள் அம்மாவுக்குச் உதவுவதன் மூலமாகவும் உங்கள் அன்பையும் பாராட்டையும் வெளிக்காட்டலாம். வீட்டைச் சுத்தம் செய்வது, வேலைகளைச் செய்வது அல்லது சவாலாகக் கருதும் பணிகளில் உதவுவது ஆகியவை அடங்கும்.
நினைவில் கொள்ளுங்கள், சிந்தனையும் முயற்சியும்தான் மிகவும் முக்கியமானது. உங்கள் அன்பையும் நன்றியையும் வெளிப்படுத்தும் ஒரு இதயப்பூர்வமான செய்தி, கையால் எழுதப்பட்ட கடிதம் அல்லது ஒரு எளிய தொலைபேசி அழைப்பு கூட அன்னையர் தினத்திற்கான அர்த்தமுள்ள மற்றும் கடைசி நிமிட பரிசாக இருக்கும்.