Connect with us

மதுபிரியர்களுக்கு செக்!! டாஸ்மாக் பார்கள் 4 நாள் மூடல்..

samayam tamil 5 1

தமிழகம்

மதுபிரியர்களுக்கு செக்!! டாஸ்மாக் பார்கள் 4 நாள் மூடல்..

மதுபிரியர்களுக்கு செக்!! டாஸ்மாக் பார்கள் 4 நாள் மூடல்..

தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் வருகிற 19ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெறுகிறது. பிரச்சாரம் முடிவடைய சில தினங்களே உள்ளதால் வேட்பாளர்கள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

அந்த வகையில்  நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் வாக்கு எண்ணிக்கையானது வரும் 22- ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே சென்னை மாவட்டத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் விற்பனைக் கடைகளும் அதனுடன் இணைந்த பார்களும் 4 நாட்கள் மூடப்பட்டிருக்க வேண்டும் என சென்னை மாவட்ட கலெக்டர் தெரிவித்துள்ளார்.

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடக்கும் போது எந்தவொரு மதுபானத்தையும் விற்பனை செய்யவோ அல்லது வெளியில் கொண்டு செல்லவோ கூடாது  தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், மாவட்ட நிர்வாகத்தின் அறிவிப்பினை கடைபிடிக்க தவறினால் மதுபான விதிமுறைகளின் படி சம்பந்தப்பட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்தார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in தமிழகம்

To Top